சென்னை:
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு  முழுவதம ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா  ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மின் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரியும்  ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை  இன்று காணொளி காட்சி முலம் விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தனர்.
மின்கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்  மே 18-ம் தேதிக்குள்தமிழக அரசு, டான்ஜெட்கோ பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மே 18 வரை மின் கட்டணம் செலுத்தா விட்டாலும் இணைப்பைத் துண்டிக்க கூடாது உயர்நீதிமன்றம் இதற்கான தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.