கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், கொங்கு நாடு என்ற பிரிவினைவாத விதையை விதிக்க வேண்டாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். கொங்குநாடு விஷயத்தில் அதிமுக இன்று தனது மவுனத்தை கலைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுக எம்எல்ஏ கேபி.முனுசாமி. இவர் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,
அதிமுக அரசு முடியும்போது மின்மிகை மாநிலமாகதான் தமிழகத்தை கொடுத்தோம். ஆனால் தற்போது எழுந்துள்ள மின்வெட்டு பிரச்சினைக்கு அதிமுக மீது பழி போடவேண்டாம். இது மின்சார அமைச்சரின் செயல்பாடு திறமையையே வெளிப்படுத்துகிறது என்றார்.
மேலும், பேரறிஞர் அண்ணா அரசியல் கட்சியை உருவாக்கியபோது திராவிட நாடு திராவிடர்க்கே என்ற கொள்கையுடன் இயங்கி வந்தார். பின்னர் அவேர், நாட்டின் மீதும் நாட்டு மக்கள்மீதும் அவர் வைத்திருக்கும் பற்றால், அப்படிபட்ட கொள்கையை கைவிட்டார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி செய்த, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தமிழ்நாடு பிரிவதை விரும்பவில்லை.
குமரி முதல் சென்னை வரையில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாடு, தமிழர்கள் என்கிற உணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர். தற்போது சிலர் கொங்குநாடு என்ற பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களிடம் கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்கவேண்டாம். அப்படி ஒருவேலை கொங்கு நாடு என பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும் என்று எங்சசரித்தார்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படும் பொழுது, மத்திய அரசு நடுநிலைமையோடு செயல்பட்டு உச்சநீதிமன்றம் சென்றால் என்ன தீர்ப்பு வழங்குவார்களோ அதை உணரந்து நடுநிலையோடு செயல்படவேண்டும். அதிமுக அரசு நதிநீர் பிரச்னையில் உரிய முறையில் அணுகி வந்தது. காவிரி நதிநீர் பிரச்னையில் ஜெயலலிதா சட்டபோரட்டம் நடத்தி வெற்றி பெற்றார். காவிரி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டது ஜெயலலிதா என தெரிவித்தார்.