சென்னை,

மிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வு காரணமாக தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் கனவு தகர்ந்துள்ளது. இதன் காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மறைந்த  மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி திரைப்பட இயக்குனர்கள் சார்பாக  ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர், நாம் எல்லாம் சாதி மதங்களை கடந்து தமிழனாக, சமத்துவமாக இருக்கிறோம் என்று கூறினார்.

அப்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசமாக எழுந்து சென்று மேடையில் ஏறி.. இங்கு சமத்துவம் இல்லை என்று உரக்க சத்தம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அமீர் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென மேடைக்கு வந்து அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கி, அவரது  பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் வாக்குவாதம் செய்தார்.

மேலும், நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சாதிகள் உள்ளது  என்றும்,   சாதியை ஒழிக்காதவரை தமிழ் தேசியம் ஒரு காணல் நீர் என்றும் கூறினார்.

இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதையடுத்து, சில இயக்குனர்கள் மேடைக்கு வந்து அமீரை சமாதானப்படுத்தினர்.

இறுதியில் அமீர், ரஞ்சித்தின் கருத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு இடையே நடந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்தது.

திரைப்பட இயக்குனர்களின் மோல் குறித்து சமூக வலைதளங்களில் பலவாறாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.இருவரின் கருத்துக்களுக்கு ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

Sri Ram ,Tiruchchirappalli ·

அஞ்சலி பண்றதுக்கு கூட்டம் போட்டு அந்த மேடையிலேயே டிராமா போடுறதுக்கெல்லாம் சினிமா இயக்குனர்களால் மட்டுமே முடியும்……

இயக்குனர் அமிர் vs ரஞ்சித்…… நடத்துங்கடா…….

Cablearun Dkps

இயக்குனர் அமிர் _ தமிழராய் சமத்துவம் பெற்றோம்

பா.ரஞ்சித் _ இங்கு ஒருவீதியில் பல ஜாதி உண்டு ஜாதிய ஒழித்தால் மட்டுமே சமத்துவம்

கேபிள்அருண்_ வீதிக்கு ஒரு ஜாதி இருக்கட்டும் உன் படத்தில் ஒரே ஜாதிமட்டுமே உயத்தி பேசபடுகின்றது அதை மாற்று பின்பு கருத்து சொல் ……..

ஒரு இஸ்லாமியராக பிறந்து இன்று தமிழர்க்காக போராடும் அமிர் அண்ணனை இழிவுபடுத்துவதா!!!!!

வன்மையாக கண்டிக்கின்றேன் !!!!!!!

M Suresh Varan

எனக்கு உன்மையிலே டவுட், இன்னைக்கு கூவும் கமல், அமிர், கவுதமன் பா. ரஞ்சித் போன்ற சினிமா பிரபலங்கள் அந்த லேடி இருந்தப்ப ஏன் வாய் திறக்கல..

அரசியல் பழகுவோம்

#அனிதா இரங்கல் மேடையில் இயக்குனர் அமீரை இயக்குனர் ரஞ்சித் மடக்கினார் என்று வெட்டப்பட்ட வீடியோ ஒன்று வந்தது.. அதன் முழு தொகுப்பு… உண்மையில் ரஞ்சித் உணர்ச்சி வசத்தில் பேச அமீர் அதை புரிந்து கொண்டு தமிழராக ஒன்று படுவோம் என்று பதிலுரைத்தார்…
ஜாதிகளை விட்டு தமிழராக இணைவதே பிரச்சனைகளுக்கு தீர்வு காண எளியது….

Kathir Vel 

நாங்க தங்சியா பாத்தா நீங்கள் பா ரச்சித் என்ன சொலராருனா அவள சாதியா பாருனு சொல்ராரு
எனக்கு சாதி வேணாம் பள்ளி கூடத்துக்கு தேவை படுதுனா நான் எடுத்து கொடுத்துட்டு போய்கிட்டே இருப்பேன் அதனால் நான் சாதிக்கு ஆதரவானவனா இல்லவே இல்லை நீங்கள் ஏன் எப்ப பார்தாலும்…

Vijayan Tarmaraj ரஞ்சித் எதிரிகளின் கைக்கூலி யாக இருக்க வாய்ப்புள்ளது. கவனம் உறவுகளே.

அம்பேத்கர்  நேற்று நடந்த திரையுலக நட்ச்சத்திரங்கள் பங்கு பெற்ற மேடயில் அண்ணன் ரஞ்சித் அவர்கள் எத்தனையோ சேரிகளில் காமராசர் வீதி பெரியார் வீதி என்றி இருக்கிறது ஆனால் எத்தனை ஊர் தோறுகளில் அம்பேத்கர் வீதி உள்ளது என்று தன்னுடைய நாயமான கேள்வியை எழுப்பினார் , இதை தொடர்ந்து பேசிய இயக்குனர் அமிர் இந்த நாட்டில் சாதி மதங்களை கடந்து நாம் அனைவரும் இன்று தமிழர்களாக உள்ளோம் என்றார் அண்ணன் ரஞ்சித் அவர்கள் அமிர் வைத்திருந்த மைக்கை பிடுங்கி தன்னுடைய நாயமான கோபத்தை அந்த மேடையில் வெளிப்படுத்தினார் இந்த நாடு ஒரு மதவாத நாடு இந்த நாடு ஒரு சாதியவாத நாடு.