கமல் பற்றி மட்டும் கேட்காதீங்க!: கையெடுத்துக் கும்பிட்ட விசு

Must read

சென்னை:

மல்ஹாசனைப் பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என்று இயக்குநர் விசு கையெடுத்து கும்பிட்டது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்க இருப்பதாக சமீபத்தில்  அறிவித்தனர். இதற்கான
ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்கள். இவர்களது அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  இயக்குநரும், நடிகருமான விசு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.  அதற்கு ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாக விசு தெரிவித்தார்.

தொடர்ந்து கமலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விசு, “தயவு செய்து அதுபற்றி கேட்காதீர்கள் நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என கூறி கையெடுத்து கும்பிட்டப்படி எழுந்து சென்றுவிட்டார்.

நடிகர் கமல்ஹாசன் குறித்து மட்டும் எதுவும் கேட்க வேண்டாம் என்று விசு, கையெடுத்து கும்பிட்டு எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article