சென்னை: நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது  என்றும், தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும் என்றும் அயலக தமிழகர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு. தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு என்றும்  vங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் விழா நடைபெற்று வருகிறது. இன்று  2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர்பேசியதாவது:-

வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம்…  வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். * மொழிப்பற்று, இனப்பற்று நமக்கு உண்டு, அது மொழிவெறி, இனவெறியாக மாறாது என்றார். நாடுகளும், கடல்ளும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.

‘திராவிட மாடல் அரசு அமைந்ததும்  அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது. இதன்மூலம்,  வெளிநாடுகளில் வசிக்கும் நமது சொந்தங்கள் இணைக்கப்பட்டுஉள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வாழ்க்கை தேடிச் சென்றவர்கள் இல்லை, அந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள்.   வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை. நம்மை யாராலும் எதனாலும் பிரிக்கமுடியாது. பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம், இன்னும் பல ஆண்டுகள் தொடரும் சொந்தம்.

மொழி உரிமைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தது திமுக, நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாய் வாழ்வோம். உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாம் அனைவரும், யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள். நாடுகளும் கடல்களும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.

கீழடி கண்டுப்பிடிப்புகள் மூலம் நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகியுள்ளது. கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது. நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு என்றவர், வாழ்வதும், வளர்வதும் தமிழனும், தமிழுமாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும், அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம்” என்றார்.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்கக்கூடாது என வலிறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். *மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம்   தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரச  எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார்.

மேலும், தி.மு.க.   தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும். அதனால்தான் 2030-ம் ஆண்டை மனதில் வைத்து உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு  கூறினார். 

[youtube-feed feed=1]