டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 ராணுவ அதிகாரிகளில் உருக்குலைந்த 9 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்பட 13 பேரிர் பலியாபகினர். இவர்களில் உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களின் உடல்கள் தீயில்கருகி அடையாளம் காணமுடியாதபடி இருந்ததால், உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. தீயில் கருகி அவர்களின் உடல்கள் சிதைந்து காணப்பட்டதால் அங்க அடையாளங்களின்படி, சடலங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு டி.என்.ஏபரிசோதனை நடத்த ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி அதற்கான பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் வரும் வரை சம்பந்தப்பட்ட 9 பேரின் உடல் களை பத்திரப்படுத்தி வைக்கவும், இந்த பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட வீரர்களின் ரத்த வகை உறவினர்களிடம் மாதிரிகள் சேகரித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மற்றவர்களின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.