டெல்லி: வன்கொடுமைகளில் டிஎன்ஏ (DNA)  சோதனையை மட்டுமே ஆதாரமாக குற்றவாளிகள் கூற முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதனால் பாலியல்  குற்றவாளிகள் தப்பிப்பதற்கான  மற்றொரு வழியையும் உச்சநீதிமன்றம் அடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த  2010 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற பாலியல் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டில், பாலியல் தொல்லை கொடுத்த நபரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “டிஎன்ஏ சோதனையை காட்டி பாலியல் குற்றவாளிகள் எஸ்கேப் ஆக முடியாது”  என்று கூறியதுடன், அவரது சிறைதண்டனையையும் உறுதி செய்தது.

கடந்த 2010ம் ஆண்டு 10வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்த அந்த பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்பவர் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றவாளி மூக்கனுக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம்  10 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து குற்றவாளி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட துடன் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை மிகவும் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. பெண் குழந்தையின் உரிமை எப்போதும் ஆபத்தில் உள்ளது. இத்தகைய மிருகத்தனமான செயல்கள் என கடுமையாக சாடியது.

இதையடுத்து, மூக்கன்  உச்சநீதிமன்றத்தை நாடினார்.  இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு  விசாரணை நடத்தியது.  மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகள் தனக்கு சாதகமாக வந்திருப்பதாகவும் எனவே அதனை கருத்தில் கொண்டு தன்னை வழக்கிலிருந்து விடுவித்து தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “டிஎன்ஏ பரிசோதனையின்போது சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஏதேனும் தவறுகள் இருந்திருக்கலாம். எனவே டிஎன்ஏ பரிசோதனை மட்டும் குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக குற்றவாளிகள் பயன்படுத்த முடியாது. சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் அது குறித்து மருத்துவ அறிக்கைகள் நேரடி சாட்சியங்கள் ஆகியவையெல்லாம் வலுவாக இருக்கிறது என்று தெரிவித்ததுடன், மூக்கனின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு  விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தனர்.

ச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.