சென்னை:  தமிழ்நாட்டில்  இன்று மேலும் 750  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாநில தலைநகர்  சென்னையில் 110  பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7 மணி அளவில் வெளியிட்டுள்ள கொரோனா தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில்,  மாநிலம் முழுவதும் 1,01,397   கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 5,34,59,623**சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 750  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை  மொத்த கொரோனா பாதிப்பு 27,21,021  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  13  பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,388 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும்  843 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,76,017 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 8616 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில்  கோவை மீண்டும்  முதலிடத்தில் தொடர்கிறது.  கோயமுத்தூரில் இன்று 125 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 2வது இடத்தில் சென்னை உள்ளது. அங்கு 110 பேருக்கும், ஈரோட்டில் 75  பேருக்கும், திருப்பூரில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 54 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 110  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,57,206  ஆக உயர்ந்து உள்ளது. இன்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் இதுவரை 8595 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 116  பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,47,324 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 1287 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:‘

அரியலூர் 2
செங்கல்பட்டு 54
சென்னை 110
கோவை 125
கடலூர் 7
தருமபுரி 11
திண்டுக்கல் 6
ஈரோடு 75
கள்ளக்குறிச்சி 3
காஞ்சிபுரம் 13
கன்னியாகுமரி 12
கரூர் 15
கிருஷ்ணகிரி 8
மதுரை 11
மயிலாடுதுறை 2
நாகப்பட்டினம் 9
நாமக்கல் 41
நீலகிரி 18
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 4
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 0
சேலம் 42
சிவகங்கை 2
தென்காசி 1
தஞ்சாவூர் 23
தேனி 1
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 21
திருவண்ணாமலை 4
திருவாரூர் 10
தூத்துக்குடி 4
திருநெல்வேலி 12
திருப்பூர் 59
திருச்சி 24
வேலூர் 10
விழுப்புரம் 2
விருதுநகர் 4