கொச்சி: வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் கடுமையாக விமர்சனம் செய்த, அன்வர் எம்எல்ஏ மீது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரள வயநாடு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அங்கு ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி சார்பில், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். மேலும் பாஜக சார்பில், மாநில பாஜக தலைவர் சுரேந்திரனும் களத்தில் உள்ளார். இதனால், அங்கு கடுமையான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இநத் நிலையில்,  பாலக்காடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த அன்வர் எம்எல்ஏ,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அதாவது காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார். அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

“நேரு குடும்பத்தின் மரபியல் கொண்ட ஒருவர் எப்படி அப்படிச் சொல்ல முடியும்?”  என்று கூறிய அன்வரின்  கருத்துகள் அதிர்ச்சியளிப்பதாகவும், வெறுக்கத்தக்கதாகவும் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.  நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராஜீவ் காந்தியை அவமதிப்பதாக உள்ளது. பினராயி விஜயனின் மறைமுக ஒப்புதலுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம்” என்று வேணுகோபால் கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஏபி அனில்குமார் கூறுகையில், தேர்தல் ஆணையம் மற்றும் மாநில காவல்துறைத் தலைவரிடம் யுடிஎஃப் புகார் அளித்துள்ளது. இதற்கிடையில், அன்வர் கருத்துகளில் உறுதியாக நின்று, நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

“முக்கிய தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதாரமற்ற வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது குறித்து நாடு தழுவிய விவாதங்களுக்கு மத்தியில், அதற்கு எதிராக இந்திய கூட்டணியின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கேரள மக்கள் (ராகுலின்) அறிக்கைகளை எவ்வாறு மதிப்பிடுவது என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகார் செய்தார். ஆனால், அன்வர்மீது மாநிலஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, அன்வர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார். அதனை விசாரித்த கோர்ட்டு, அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, அன்வர்  எம்.எல்.ஏ. மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 153(1) ஏ மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ராகுல் முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை: கேரளாவில் இண்டியா கூட்டணி தலைவர்களிடையே முற்றும் வார்த்தை போர்!