‘நீட்’ குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ் காரசார விவாதம்

Must read

சென்னை:

மிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பான விவாதத்தின்போது,  திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே காரசாரமாக  விவாதம் நடைபெற்றது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்தியஅரசு கட்டாயமாக நீட் தேர்வை அமல்படுத்தி வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டும், கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை 2 மசோதாக்களை நிறைவேற்றி, மத்தியஅரசு வாயிலாக குடியரசு தலைவர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா அனுப்பி 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது, தமிழகத்தின் மசோதாக் களை நிராகரித்துவிட்டதாகமத்திய அரசு உயர்நீதிமன்றத்தில், நீட் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது தெரிவித்துள்ளது.

இது தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசின் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது சட்டப்பேரவைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்று தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் – திமுக

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில், இன்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவரு மான மு.க.ஸ்டாலின், நீட் தொடர்பான  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது,  குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை பிரதமர் ஆனபின் ஏற்றுள்ளார்.  நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்,  சட்டப்பேரவையின் ஆணி வேரை அசைத்துப் பார்த்த மத்திய அரசின் செயலை கண்டிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில்,  தீர்மானம் நிறைவேற்றக் கூறியது மத்தியஅரசுதான் என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இப்போது மத்தியஅரசு  அந்த தீர்மானத்தையே நீர்த்துப் போக செய்துள்ளது.

சட்டம் இயற்றும் அதிகாரம் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு அது வழிவகை செய்கிறது என்று கூறியவர்,  மத்திய அரசிற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் மாநில சட்டபேரவைக்கும் அதிகாரம் உள்ளது என்றும்,  தமிழக சட்டபேரவையின் இறையாண்மையை கேள்வி கேட்கும் விதமாக குடியரசு தலைவர் தீர்மானத்தை நிராகரித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம்  27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு நிராகரிக்கபப்பட்டு உள்ளது கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது என்று கடுமையாக சாடியவர் , இதற்கு முன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்,  சட்டபேரவையின் ஆணிவேர் மாய்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், நீட் தேர்வினால்  தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றவர்,  மத்திய பாஜக அரசிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், சட்டபேரவையின் ஆணி வேரை அசைத்து பாரக்குங்ம மத்திய அரசின் செயலை கண்டிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் இது தொடர்பாக  உச்சநீதி மன்றத்தையும் அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கே.ஆர்.ராமசாமி – காங்கிரஸ்

இதையடுத்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி,  நீட் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு தமிழக அரசுக்கு தெரியுமா?, தெரியாதா?  என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: 

உச்சநீதிமன்ற தலைமை அமர்வு தீர்ப்புப்படி தான் நீட்தேர்வு அமல் படுத்தப்பட்டது.  திராவிட கட்சிகள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம், ஆனால் காங். கட்சி அப்படி இல்லை – நீட் தேர்வு விவகாரத்தில் காங். மிகப்பெரிய நாடகமாடுகிறது.  நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சிதான் என்று குற்றம் சாட்டினார்.

கே.ஆர்.ராமசாமி- காங்கிரஸ் 

காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்ததாக அமைச்சர் சொல்கிறார். எங்களது தேர்தல் அறிக்கையில் விரும்புகின்ற மாநிலங்களில் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தோம் என்பதை சுட்டிக்காட்டினார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ்

பின்னர் பேசிய ஓ.பி.எஸ், நீட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றார். மீண்டும் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு என்று தெரிவித்தார்.

ஆனால், நீட் மசோதா நிராகரிப்பு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக வாதாடி இருக்கலாம். ஆனால், எதிராக வாதாடினார்.  தமிழகத்திற்கு நீங்கள் செய்த மிகப் பெரிய துரோகம் இது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்..

துரைமுருகன்:

நீட் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன பிரச்சனை? என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா என்ன காரணத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என  விளக்கமளித்தார். மேலும் தமிழக அரசின் கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என கூறினார்.

மத்திய அரசை கேள்வி எழுப்ப சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு எனவும் கூறியுள்ளவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தகவலை, நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் கள் என்றும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை, மீண்டும் வலியுறுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி

நீட் விவகாரத்தில் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து நீட்தேர்வு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.

More articles

Latest article