சென்னை; ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதின் மூலம் தி.மு.க.வின் ‘பி’ டீம் என்பதை ஓ.பி.எஸ். நிரூபித்துள்ளார்- என்று குற்றம் சாட்டிய எடப்பலாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளதுன், எங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியில் இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக போட்டியிட தீர்மானத்துள்ள நிலையில், பாஜகவும் தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில், தனித்து போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டணி கட்சி தலைவரான ஜிகே வாசனை சந்தித்து ஆலோசனை கோரிய நிலையில்,, மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே கூறி வந்தோம். அது தற்போது நிரூபணமாகி உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் ‘பி.டீம்’ என்பதை நிரூபித்து விட்டார். அ.தி.மு.க.வை வீழ்த்தத்தான் அவர் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால் அவர் கனவில்கூட வீழ்த்த முடியாது.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். தனி மனிதராக ஆதரவு கேட்பதற்கும் கட்சி ஆதரவு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தனி மனிதருக்கு எந்த கட்சியும் ஆதரவு அளிக்காது. நாங்கள் கூட்டணி தர்மப்படி இன்று மாலையில் பா.ஜனதா தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்றார்.
மேலும், எங்கள் அணிக்கு இரட்டலை இலை சின்னம் கிடைக்குமா என பல சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். அதிமுக வழக்கு உச்சநீதிமன்றத்தில், நிலுவையில் இருந்தாலும், இதுவரை நீதிமன்றம் எந்தவொரு தடையும் விதிக்கவில்லை. அதனலால், அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். சின்னம் தங்களுக்கு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விட்டோம். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சும் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அறிவித்துள்ளது. அதனால் வேட்பாளருக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு கிடைக்கும். இதில் எந்த சிக்கலுக்கும் இடம் இல்லை என்றார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. சட்டத்துறை உறுப்பினர் வக்கீல் இன்பதுரை கூறும்போது, ‘கட்சி இரண்டாக பிளவுபடவில்லை. முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் பெரும்பான்மை எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகமும் எங்கள் வசமே இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இணையதள முகவரியையும் நாங்களே பயன்படுத்துகிறோம். வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ததையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே இரட்டை இலையை நாங்கள் பெறுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது’ என்றார்.