மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்  நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் நாளை ( சனிக்கிழமை)  பிற்பகல் 3 மணிக்கு திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள்  கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கட்சி பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி என அனைத்து அணிகளும் களப்பணியாற்றும் வகையில் ஆலேசானை கொடுத்து வருகிறது.

அதன் விருதுநகர் மாவட்டம் கால்குறிச்சியில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 10 தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இது தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இந்த கூட்டட்த்தில்,   தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா். திமுக இளைஞரணிச் செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். விருதுநகா் மாவட்ட திமுக செயலரும், தமிழக நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு வரவேற்கிறாா். அமைச்சா்கள் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி, மு.பெ. சாமிநாதன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், திமுக மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி என். சிவா, நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை உறுப்பினா்கள் ஆ. ராசா, ப. செல்வராஜ், திமுக துணைப் பொதுச் செயலா் க. பொன்முடி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

தமிழக அமைச்சா்கள், திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா்.  இதற்காக   கல்குறிச்சியில் சுமாா் 300 ஏக்கா் திடலில் மிகப் பெரிய அளவிலான மேடை அமைக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீா், தற்காலிக கழிப்பறை, வாகன நிறுத்துமிட வசதிகள் உள்பட மாநாட்டுக்கு இணையான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]