சென்னை: திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு   நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின்  தனி விமானத்தில் கேவை  புறப்பட்டார். கோவை சென்டைந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில்  இன்று மாலை  ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள   இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர். இந்த  மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

தமிழ்நாடு  அரசின் நலத்திட்டங்களை விளக்கியும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கூட்டங்கள் மாநாடு போல் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்காக, 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்து பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி என மகளிர் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசின்  திட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவும், சட்டமன்ற தேர்தல் பணியில் மகளிர் அணியினர் திறம்பட செயலாற்றும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4மணிக்கு ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராககலந்துகொள்ளும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. கட்சியினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாநாடு முடிந்ததும் கோவை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8-30 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

[youtube-feed feed=1]