சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு ஊடகங்களின் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ள நிலையில், மாலைமுரசு ஊடகம்த நடத்திய கருத்துக்கணிப்பிலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதுரும் மாலை முரசு தொலைக்காட்சி நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பில் 151 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகவிம், அதிமுக 56 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், மாநில முதல்வர்  வேட்பாளர், தொகுதி வேட்பாளர், கட்சி, பணம் , வாக்குறுதி என்ற அடிப்படையில் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாகவும்,  அதன்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு முடிவில் 151 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும்,  27 இடங்களில் இழுபறி நீடிப்பதாக தெரிவித்துள்ளது.

3வது அணியாக களமிறங்கி உள்ள அமமுக ஒரு இடத்திலும், 4வது அணியாக களமிறங்கி உள்ள கமல்ஹாசன் அணி ஒரு இடத்திலும், நாம் தமிழர் கட்சிக்கு எந்தவொரு தொகுதியும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 40 சதவிகிதம் பேர் ஆதரவு கொடுத்துள்ளதாகவும்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு 32 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.