சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்  திமுக சார்பில் போட்டியிடுவோர் இன்று முதல் விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள்,  தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.   அதன்படி திமுக சார்பில் இன்றுமுதல் விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.

அதன்படி,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்புவர்களுக்கு தி.மு.க. சார்பில் இன்றுமுதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.

மனுக்களை திருப்பி செலுத்த மார்ச் 2 கடைசி நாள் என்றும், பொதுத்தொகுதிக்கான விண்ணப்பம் ரூ25000, மகளிர் மற்றும் தனி தொகுதிக்கான விண்ணப்பம் ரூ15000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது,

[youtube-feed feed=1]