சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சகிளிடையே வரும் 4ந்தேதி திமுக தலைமை தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, தேர்தல் அறிக்கை மற்றும் பிரசாரம் தொடர்பான வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான கூட்டணி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது உடன், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக தலைமை அடுத்து, மாக்சிய கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
அதன்படி, பிப்ரவரி 3ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி திமுக தலைமையுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில், சுப்பராயன் எம்.பி,, முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உள்பட குழுவினர் பங்கேற்கின்றனர் அதைத்தொடர்ந்து பிப்ரவரி 4தேதி மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.