சென்னை: திமுகவைச் சேர்ந்த  சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, மாநில கவர்னர் ரவி குறித்து, அநாகரிகமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய பேச்சு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில்  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆலந்தூர் பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தி உள்ளது.

தமிழகமுதல்வர்,  தமிழக அரசின் நடவடிக்கைள், அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து, சமூக வலைதளங்களில் அவதூறாக பேசினாலோ, கருத்து தெரிவித்தாலோ, அவர்களை உடடினயாக கைது செய்து சிறையில் அடைப்பது, மாநில காவல்துறையின் முக்கிய நடவடிக்கையைக இருந்து வருகிறது. பின்னர், இந்த வழக்குகள் நீதிமன்றதால்,  காவல்துறையின் நடவடிக்கையை காரி உமிழ்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்  தி.மு.க சார்பில் நடந்த கூட்டத்தில்  பேசிய திமுக சட்டத்துறை செயலாளரான ஆலந்தூர் பாரதி, தமிழ்நாட்டின் முதல்குடிமகனான ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, ஒருமையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவதூறாக பேசியது சர்ச்சையானது. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அவர் மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தபால் மூலம் ஆளுநர் மாளிகை துணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி புகார் அளித்துள்ளார்

ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேலே இது வெடித்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் அரசின் உரையில் அச்சிடப்பட்டிருந்த திராவிடம், அம்பேத்தகர், அண்ணா, கருணாநிதி, சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டு படித்ததாகவும், அவரே சில வார்த்தைகளை சேர்த்து படித்ததாகவும், இது மரபு அல்ல எனவும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கடும் குற்றஞ்சாட்டினர். சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. ஆளுநர் உரைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்தனர். இதையடுத்து ஆளுநர் பேரவை நிகழ்வுகள் முடிவதற்கு முன்பே பாதியில் வெளியேறினார். முன்னதாக, ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதுவும் பெரும் விவாதப் பொருளானது.

ஆளுநரின் பொங்கல் விழாவை தி.மு.க கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தி.மு.க எம்.பிக்கள் ஆளுநர் குறித்து ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தி.மு.க ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க கூட்டத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ரவி குறித்து அவதூறாகவும், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜ்பவன் துணை செயலாளர் பிரச்சன்ன ராமசாமி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ஆளுநர் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவியை பற்றி தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”வட சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் கவர்னர் வீட்டுக்கு போயிருக்க முடியுமா?’ என்கிறார். அதாவது ஆளுநரை கொலை செய்யக் கூட தயங்காது திமுக என்ற பொருள்பட பேசியிருக்கிறார். திமுகவின் அதிகாரத் திமிரை தெளிவாக இது உணர்த்துகிறது.

ஜனநாயக நாட்டில் ரவுடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இவருக்கும் கட்சியின் தலைவர் சொன்னதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்னதாக நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில், பாளையங்கோட்டையில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, “கவர்னருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார். கூட்டம் நடத்துகிறார். திராவிடம் என்பதே இல்லை என சொல்கிறார். ஐ.பி.எஸ். படித்து முடித்துவிட்டு , வேலைக்கு சேருவாங்க, அந்த வேலையை விட்டுட்டு அரசியலுக்கு வர்ற அதிகாரிகளெல்லாம் மெண்ட்டலாகத்தான் இருப்பாங்க” என்று கடுமையாக ஒருமையில் பேசினார். இது தொடர்பான வீடியோவும் வைரலானது.

இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, ஆர்எஸ் பாரதி பேசய பொதுக்கூட்டத்தின் முழு வீடியோவையும்  கவர்னர் ரவிக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில் முதன்முதலாக திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.