சென்னை

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக வார் ரூம் அமைத்துள்ளது.

மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு,  இதில் பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார்.

ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழவும்  சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி  தலைமையிலான குழுvum செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.