சென்னை:

நாளை திமுக தலைமையில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காவிரி விவகாரம் குறித்து நாளை திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நாளையும் விசாரணை நடைபெறவுள்ளதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் இன்றைய விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையிடம் டில்லியில் அமைப்பது போன்ற  முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.

இதன் காரணமாக திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.