கோவை: தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவைக்கு  தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு  திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலிஉ உடன் இண்டியா  கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் திரண்டு வரவேற்றனர். பலர் முதலமைச்சருக்கு  புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து வரவேற்றனர்.

இதையடுத்து,  கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவினாசி சாலை நீலாம்பூர் பகுதிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்பு மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்பு இரவு 7.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.