சென்னை: ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும்  என்றும், மாநகராட்சி வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்.29 முதல் மே 1ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

திமுக 15வது பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேரூர் மற்றும் நகர கழக வார்டுகளுக்கு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28 வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கிளை கழக தேர்தல் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையர்களை, கொண்டு திமுக பேரூர் நகர வார்டு கழக தேர்தல் நடத்தப்படும் என்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தலைமையில் திமுக பேரூர், நகர, மாநகர பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்கிளை கழக தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.