சென்னை:
திமுக எம்.பி.மகன் பாஜகவில் இணைந்த விவகாரம் குறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதில் அளித்துள்ளார்.

பாராளுமன்ற திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா நேற்று திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்த சூரியா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
குறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதிலில், திமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது சாதாரண நிகழ்வு தான் என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel