லண்டன், அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Must read

சென்னை:
மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா செல்ல உள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விதமான சாதனைகளை செய்துள்ளார். அதுவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதை துபாய் பயணம் தொழில் முதலீடுகளை ஈட்டுவதற்காக சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இவரது துபாய் பயணம் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர். அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் மற்றுமொரு வெளிநாட்டு பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.

ஜூன் இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்கா சென்று புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார். ஏற்கனவே துபாய் பயணம் செய்தது பற்றி பலரும் விமர்சித்த நிலையில் மற்றுமொரு வெளிநாட்டு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article