டெல்லி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 55 மீனவர்கள், 73 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது பற்றி விவாதம் நடத்த திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் கோரினார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில் கோஷமிட்டனர்.

பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடை யில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள், தமிழ்நாட்டின் ரமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர்கள் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
[youtube-feed feed=1]கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி கடிதம்..