காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்தநாள்: திமுக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து….

Must read

டில்லி:

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று 49வது பிறந்த நாள் .அவரது பிறந்தநாளை யொட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள், சகோதரி பிரியங்கா காந்தி உள்பட ஏராளமானோர் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பலர் தொலைபேசியும், சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராகுல் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த  திமுக எம்.பி.க்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று மக்களவையில் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்பிற்குப் பிறகு,  நாடாளுமன்றத் தின் காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தியை நேரில் திமுக அவைத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் பொன்னாடை போர்த்தி ராகுலுக்கு தம் கட்சி சார்பில் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

அவருடன் கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட திமுகவின் 19 எம்.பி.க்கள் மற்றும் திமுக  மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட அனைவரும்  மலர்க்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ராகுலின் தாயும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தியும் உடன் இருந்தார்.

More articles

Latest article