சென்னை; மணல் கடத்தலுக்கு துணைபோகும் திமுக எம்.பி. மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நதியைச் சூறையாடுவது பெருமையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றமும் பலமுறை கண்டனம் செய்துள்ளது. இந்த நிலையில், திமுக எம்.பி. ராஜேஷ்குமார் கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன் என அதிகாரிகளை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதையடுத்து,  தமிழக முதல்வர் மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

இதுகுறித்து, மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, நதியைச் சூறையாடும் அவலத்துக்குத் துணைபோவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணல் கடத்தும் உரிமை ஏகபோகமாக ஆளுங்கட்சியினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இச்சம்பவம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக டெண்டர் விடப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. இச்சூழலில், மணல் அள்ள கட்சிக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாக திமுக எம்.பி. பேசியது யார் கொடுத்த தைரியத்தில்?

எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.