சென்னை:

மிழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, பிரச்சினைகளை உருவாக்கி வருவதில் முதன்மையானவர் பாஜக தேசியலாளர் எச்.ராஜா.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ள ராஜாவுக்கு, திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், எச்.ராஜாவின் சர்ச்சை பதிவு பாரதிய ஜனதா கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக்ததில்  அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மக்களிடையே ஜாதி மத துவேஷத்தை பரப்பி வருபவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.  இந்நிலையில், திமுக மாநிங்களவை எம்.பி.யும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குறித்து நாகரிகமற்ற முறையில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பெண் செய்தியாளர் கன்னத்தில் கவர்னர் தட்டியது குறித்து, கனிமொழி டுவிட் செய்திருந்தார். அதில், பொதுவாழ்விலும் மற்ற துறைகளிலும் பணியாற்றும்  பெண்களின் பாதுகாப்பற்ற தன்மையை இது எடுத்துக்காட்டுவதாக கூறியிருந்தார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், கனிமொழி குறித்து நாகரிகமற்ற முறையில் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,

‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம், ஆளுநரிடம் கேட்டது போல் கேட்பார்களா. மாட்டார்கள்.

சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ்,பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எச்.ராஜாவின் வரம்பு மீறிய அநாகரிக  செயலுக்கு  அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் எச்.ராஜாவின் பதிவுக்கு கடுமையான  எதிர்  பதிவுகளும் பதியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  எச்.ராஜாவின் கருத்துக்கு கனிமொழி பதில் தெரிவித்து உள்ளார்.

எச்.ராஜாவின் பதிவு பாரதிய ஜனதா கட்சியின் மனநிலையை பிரதி பலிக்கிறது என்றும், அவரது மனப்போக்கை அம்பலப்படுத்துகிறது என்றும், இதுவே பா.ஜ.க.வின் ராஜா ராசாவின் அறிக்கைக்கு பதிலளிக்க தன்னை தூண்டுகிறது என்றும் கூறி உள்ளார். 

நாட்டில், சாத்தியமான ஒவ்வொரு இடத்திலும் பெண்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு எச்.ராஜாவின் பதிவு  ஒரு உதாரணம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,   நான் இந்த மாநிலத்தில் ஒரு முக்கியமான கட்சியைச் சேர்ந்தவள், தற்போது 2வது முறையாக எம்.பி.யாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள கனிமொழி,  அரசியல்வாதிகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அரசியலில் பெண்களும் பாதுகாப்பாக இல்லை என்றும், பொது இடங்களில் பெண்களை தொந்தரவு செய்வது மற்றும் அச்சுறுத்துவதுதான்  நடைபெற்று வருகிறது, இது மருத்துவர்கள், ஐடி தொழில் வல்லுனர்கள், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் போன்ற அனைவருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை காட்டுகிறது என்று கூறி உள்ளார்.

எச்.ராஜாவின் முகநூல் பதிவுக்கு, பா.ஜ.தலைமை பதில் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ள கனிமொழி, இதுபோன்ற செயல்கள்  என்னை அரசியலில் இருந்து பின்வாங்க வைக்க முடியாது என்றும் கூறி உள்ளார்.

எச்.ராஜாவின் சர்ச்சை பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவருமான ப.சிதம்பரம்,  கனிமொழி சட்டப்பூர்வமான குழந்தை என்றும்,  பாரதியஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

எச்.ராஜாவின் பதிவுக்கு திமுக பேச்சாளர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது,  இவன் ஒரு மன நோயாளி என்பதை உயர் நீதி மன்றமே கேள்வி கேட்டிருக்கிறது? நம் கேள்வியெல்லாம் பாஜக இப்படிப்பட்ட ஒரு கேவலமான பிறவியை தேசிய செயலாளராக வைத்திருக்கிறதே? இந்த கருத்துக்களை பாஜக ஆதரிக்கிறதா? இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை, பாஜக ஆட்சி என்ற ஒரே திமிரும் பொறுக்கித்தனமும் தானே இது.

இதுபோல ஏராளமான போர் ராஜாவின் பதிவு குறித்து பதிவிட்டு உள்ளனர். எச்ச ராஜாவின் பதிவு வெட்கக்கேடானது என்றும்,  அவரது பதிவு மட்டரகமானது, கீழ்த்ததரமானது  என்றும் பதிவிடப்பட்டு வருகின்றன.