சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேசிய கேலமான திமிர் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரணமாக பெரியார் குறித்து பேசும் பேச்சுக்கள் மீது உடடனே நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, ஆ.ராசாமீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக அரசு உண்மையிலேயே சமூக நீதியை பின்றுபற்றுவது உறுதி என்றால் ஆ.ராசா உடனே கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, ‘தனித் தமிழ்நாடு கேட்ட பெரியாரை ஏற்றுக் கொண்ட திமுக, அவரது இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்…’ என்று வழக்கமான தமது பாணி பேசிக் கொண்டிகுந்த ஆ.ராசா, இந்துக்களின் மனம் புண்படும்படியான விபச்சாரி மகன் என திமிராக குறி்ப்பி்ட்டு பேசியது தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரல் வீடியோ, மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, வேதனை தெரிவித்துள்ளார். 40 வினாடிகள் கொண்ட ஆ.ராசாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளதுடன், ‘திமுக எம்.பி ஆ.ராசா, மற்றவர்களை திருப்திப்படுவதற்காக ஒரு சமூகத்தை தவறாக பேசி கொண்டிருக்கிறார். இத்தகைய தலைவர்களின் மனநிலை ரொம்பவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து கொதிப்படைந்துள்ள இந்துக்கள், திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த ஒராண்டு காலத்தில், இந்துக்கள் மீதா தாக்குதல் அதிகரித்து வருவதாக கூறும் பொதுமக்கள், இந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது, ஆட்சியாளர்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
சமூக வலைதள்ங்களில் நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும், ஆ.ராசாவின் இந்த அவதூறு பேச்சுமீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ச முதல்வ்ர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார், சமூக காவலர் என்றுகூறிக்கொள்ளும் ஸ்டாலின் ஆ.ராசாமீது நடவடிக்கை எடுப்பாரோ அல்லது எப்போதும்போல கண்டும் காணாது போல இருப்பாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சாதரணமாக யாரும் பேசினாலே, அது சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாக கூறி கைது நடவடிக்கை மேற்கொள்ளும் டிஜிபி, தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார், அவரது கண்ணுக்கு ராஜா பேசும் வீடியோ தெரியவில்லை என்று விமர்சிக்கப்பட்ட வருவதுடன், ராசாவின் விமர்சனத்தை திமுக அரசு ஏற்றுக்கொள்ளுமானால், கோவில் கோவிலாக சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் அதில் அடக்கம்தானே என நெட்டிசன்கள் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.
பொதுவெளியில் ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் வகையில், இதுபோன்று சர்ச்சைக்கு இடம் அளிக்கும் விதத்தில் மற்ற மதத்தின் மீது வன்மம் பேசாமல் இருப்பதே ஆ.ராசாவுக்கும், திமுகவுக்கும் நல்லது என அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.