சென்னை

திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் தலித் சிறுமியை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்/’

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆவார்கள். ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா ஆகியோர் திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (வயது 18) என்ற பெண் வீட்டு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.  ரேகா பல மாதங்களாக ரேகா வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்குப் பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காமல் ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா துன்புறுத்தியுள்ளனர்.

இருவரும் அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, ஜாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெர்லினா அடித்துத் துன்புறுத்தியதில் ரேகாவின் தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தனக்கு நடந்த கொடூரம் குறித்துப் பாதிக்கப்பட்ட ரேகா  பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர். மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

காவல்துறையினர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர். கருணாநிதி  மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

இன்று பணிப்பெண்ணைத் தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.