சென்னை:
கஸ்ட் 13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். ஆகஸ்ட்13-ஆம் தேதி காலையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் -அரசு தலைமை கொறடா கோவி.செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இநிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது.