உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Must read

சென்னை:
ள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெற உள்ள நிலையில், அந்த விடுபட்ட பகுதியின் மாவட்ட செயலாளர்கள் 40 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களிடையே நமக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

More articles

Latest article