திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது…!

Must read

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில்  உள்ள கலைஞர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன்தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு (24ந்தேதி வரை) சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

முன்னதாக 21ந்தேதி மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்திருந்தது. அதன்படி,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.  எம்எல்ஏக்கள் சட்டமன்ற நிகழ்வுகளில் எப்படி பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.

More articles

Latest article