சென்னை

மிழக சட்டப்பேரவையில் Tamil என ஆங்கிலத்தில் உள்ளதை Thamizh என மாற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் வெற்றியழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு எழுத்தான ழ என்னும் எழுத்தைப் பலரும் தவறாக உச்சரிக்கின்றனர்.  வேறு எந்த எழுத்துக்கும் இல்லாத சிறப்பு ழ என்னும் எழுத்துக்கு உண்டு.  தமிழ் என்னும் மொழியின்  பெயரில் ழ் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் ஆங்கிலத்தில் நமது மொழியை Tamil என எழுதுகின்றனர்.  இதைப் பலரும் டமில் என உச்சரிக்கின்றனர்.  ஆங்கிலேயருக்கு ழ வராது என்பதால் அவர்கள் மாற்றி வைத்தது இன்னும் தொடர்ந்து வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன, “நமது செம்மொழியான தமிழ் மொழியின் சிறந்த எழுத்தைப் பயன்படுத்தாமல் நாம் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற டமில் (Tamil) எனச் சொல்வதை (Thamizh தமிழ் என மாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.