துரை

ள்ளாட்சித் தேர்தலில் திமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் தடை விதித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.   இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.   வேட்பு மனுத்தாக்கல் செய்ய இரு தி நாள் பிப்ரவரி 4 என்பதால் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடப்  பல முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது.

திமுக நிர்வாகிகள் சிலர், “மதுரை நகரில் மகளுக்கும் மருமகளுக்கும் மேயர் பதவியைப் பெற இரு திமுக மாவட்டச் செயலாளர்கள் கடும் போட்டி இட்டனர்.  மேலும் நகராட்சி தலைவர் பதவிகளைக் கைப்பற்றப் பல அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடும்பத்தினர் மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர்.   இந்த தகவல்கள் முதல்வருக்கு அளிக்கப்பட்டது.

முதல்வர்  மற்றும் திமுக தலைவர் மு ஸ்டாலின் நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் அது வாரிசு அரசியல் எனப் பிரச்சினை ஆக்கப்படும் எனக் கருதினார்.  இதையொட்டி அவர் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என அறிவித்தார்.

மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி வாய்ப்பு எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.   முதல்வரின் இந்த அறிவிப்பால் மற்ற உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந்த நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட உள்ள இடங்களில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.