சென்னை: நெல்லை, வேலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக போட்டியின்றி திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
நெல்லை ராதாபுரம் ஒன்றிய குழு தலைவராக திமுகவின் சௌமியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்/
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக 22 வயதான இளம் பொறியியல் பட்டதாரி பெண் ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த விஆர்எஸ் ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு
செங்கல்பட்டு திருப்போரூர் ஒன்றிய குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இதய வர்மன் தேர்வு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் குழு தலைவராக திமுகவின் திருமலை செல்வி போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் ஒன்றிய குழு தலைவராக திமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூர் – அமுதா ஞானசேகரன், காட்பாடி – வேல்முருகன், கணியம்பாடி – திவ்யா, பேரணாம்பட்டு – சித்ரா ஜனார்தனன், கே.வி.குப்பம் – ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திருமதி சத்தியா சதிஷ்குமார் அவர்கள் ஒருமனதாகத் தேர்வு,
விழுப்புரம் மாவட்டம் ஊராட்சி குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.