சென்னை:
தமிழக சட்டசபையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 29ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் கூட்டத்தில் ஸ்டெர்லைக்கு எதிராக குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டு, சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதையடுத்து போட்டி சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என அறிவித்து, நேற்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்ற கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினரை அழைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ், பேரவையில் இருந்து திமுகவினர்தான் வெளியே சென்றார்கள்; அவர்களே மீண்டும் வரலாம் ஜனநாயக கடமையற்ற பேரவைக்கு மீண்டும் திமுக வந்தால் நாங்களா தடுக்கப் போகிறோம் என்று கூறினார்.