தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு சுற்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
234 தொகுதிகளுக்குமான முன்னிலை நிலவரம் தற்போது தெரியவந்திருக்கிறது, இதில் திமுக கூட்டணி 133 இடங்களிலும் அதிமுக 100 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது.
இதன் மூலம் கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கும் தமிழக மக்கள் விடை கொடுத்தது ஆட்சி மாற்றத்துக்கு வழி செய்திருப்பது தெளிவாக தெரிகிறது.