சென்னை: கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கொளுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைப்பவர்களை மக்கள் தண்டிப்பர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. ஒடுக்கிட வக்கற்ற முதலமைச்சரின் போக்கு வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel