சென்னை: தலைமைச்செயலாளர், நிதிச்செயலாளர் உள்பட உயர்அதிகாரிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கொரோனா நிலவரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே நேற்று நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், வருவாய் துறை செயலர் உள்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், பொதுமுடக்கம் அறிவித்தால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம், நிதி இருப்பு, ஆட்சி ஏற்றதும் மேற்கொள்ளடபட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள் பலதுறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.