சென்னை: மதவாதத்திற்கு மட்டுமே எதிரானவர்கள் மத்திற்கு அல்ல தமிழ்நாட்டில் உள்ள 2,500 கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி வழங்கி உரையாற்றினார்.

சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,250 கிராமங்களில் உள்ள கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 1, 250 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் விதம் 50 கோடி ரூபாய்க்கான நிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவில்கள் கலை மற்றும் பண்பாட்டு சின்னங்களாக திகழ்கிறது என்றவர், சமூக சமத்துவம் கொண்டதாக ஆலயங்கள் திகழ வேண்டும் என்று கூறிய அவர்,  சாதி மதத்தை காட்டி யாரையும் புறக்கணிக்க்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தாங்கள் மதவாதத்திற்கு மட்டுமே எதிரானவர்கள் என்றும் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் கூறியுள்ளார்.

பழமை வாய்ந்த கோவில்கள் மற்றும் குளங்களின் பாரம்பரியம் சிதைக்கபடாமால் இருக்க ஆலோசனை குழு நியமிக்கபட்டதாக கூறியவர், 112 கோவில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் 5,078 கோவில்கள் இந்த ஆண்டு திருப்பணி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.