திருச்சியில் மனித சங்கிலி

சென்னை,

திமுக தலைமைக்கழகம் அறிவித்தபடி இன்று மாலை 4 மணி அளவில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது.

சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளதையடுத்து, கோவை, சேலம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மனித சங்கிலி  போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தி.மு.க. கூறியிருந்தது.

அதன்படி சென்ன உள்பட மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்குபெற்றுள்ள மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சின்னமலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.