சென்னை: கல்வித்துறையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் தமிழ்நாடு அரசு, அடுத்த முயற்சியாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 11ம்வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கிரியேட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது கல்வித்துறையின் புதிய மைல்கல்லாக விளங்குகிறது.
அதன்படி, தனிப்பயனாக்கப்பட்ட அஞ்சல் ஐடிகளை உருவாக்க மாணவர்களுக்கு உதவுமாறு தமிழக அரசுப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டுதலை எளிதாக்க, ஒவ்வொரு மாணவரும் தங்கள் ஆசிரியர்களால் தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வி முன்னேற்றத்தில் தலைசிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடக்கக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். புதிய புதிய திட்டங்களைத் தந்து குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கற்கும் சூழ்நிலையை மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் உருவாக்கியுள்ள திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நுழை-நட-ஓடு-பற-திட்டம், காடு, மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், அதிகவேக இணைய இணைப்பு, இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள், மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம், மற்றும் நான் முதல்வன், புதுப்பெண் திட்டம் என ஏராளமான திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உயர்ந்து வருகிறது.
இதன் அடுத்த நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும், உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முடி உருவாக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தயாரித்து அதனை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன யுகத்தில், அனைத்து வகையான செய்லகளும், இணையதளம் மூலமே நடைபெற்று வருவதால், மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டியதும் அவசியமாககிறது. இதை கருத்தில்கொண்டு, இதனை மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே டிஜிட்டல் உலகை புரிந்துகொள்ளும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மையமாகக் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், பள்ளிப்பருவத்தில் மேல்நிலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி (E Mail ID – இ மெயில் ஐடி) முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு கலை அறிவியல் படிப்பு, பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர இது முக்கியமானதாக உள்ளது.
அதன்படி தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்க பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு இ மெயில் ஐடி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட நிகழ்வுகளில் மாணவர்கள் நேரடியாகவே தெரிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இ மெயில் ஐடி தொடங்க ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு இமெயில் ஐடி தொடங்கப்பட்டு அதனை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]