சென்னை: பெரியார் குறித்து விமர்சனம் செய்து வரும் சீமான் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு, சீமானை திமுக அரசு கைது செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது.
பெரியார் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த, நாம் தமிழர் கட்சி சீமான்மீது, திமுக, திகவினர் மாநிலம் முழுவதும் ஏராளமான புகார்களை கொடுத்து உள்ள நிலையில், முதலில் வடலூர் காவல்துறையில் இருந்து சீமான் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் மற்றும் திராவிடம் குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது கடும் கோபத்தில் உள்ள திமுக அரசு, அவரை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே அவர்மீது சென்னை உள்பட மட்டும், பல மாவட்டங்களில் 62 வழக்குகள் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மேலும் பல பகுதிகளில் அவர்மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் சீமான் பேச்சுக்கு திராவிட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது. அவரது வீட்டையும் முற்றுகையிட முயன்றனர்.
இந்த நிலையில், அவரை கைது செய்யும் வகையில், திமுக அரசு தனது முதல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. சீமானின் அரசியல் பயணத்தை முடக்கும் நோக்கில், ஏற்கனவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தனது கட்சிக்க இழுத்துள்ள திமுக, தற்போது காவல்துறையை கொண்டு நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுத்துள்ளது.
ஈ.வெ.ரா., குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வடலூர் போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஈ.வெ.ரா., குறித்து பேசிய சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்குச் சென்ற வடலூர் போலீசார் சம்மனை வழங்கினர். அதில், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசால் கார்னர் செய்யப்படும் சீமான்…!? அடுத்தடுத்து பாயும் வழக்குகள், விரைவில் கைது?