சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் கட், விடுமுறை கிடையாது என தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் முதல்வராக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது, கடந்த 2009ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என 2021 தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் குறித்தது திமுக உறுதி அளித்தது. ஆனால், திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்ற வலியறுத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பணிக்கு வருகைபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான விவரங்களையும் அவர் கோரியுள்ளார். விடுமுறை எடுக்க அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: ’’தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கு 24.12.2025 முதல் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 05.01.2026 அன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் மாணவர் களுக்கு உடனடியாக வழங்கப்பட்டு, அப்பாடப் புத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்ளுவதற்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் – கற்பித்தல் மற்றும் ஒழுக்கம் குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
No work No pay
எனவே, பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் /ஆசிரியர்களுக்கு “No work No pay” அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போராட்டத் தில் கலந்து கொண்டு பணிக்கு வருகை புரியாமல் உள்ள ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் வர இயலாதவர்களை தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக்கூடாது.
அத்துடன் பணிக்கு வருகைபுரியாத காலத்தினை ஊதியமில்லா விடுப்பாக அனுமதித்து, அவர்களின் வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) உறுதி செய்ய வேண்டும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனால் 05.01.2026 தேதி முதல் (தேதி வாரியாக) போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விபரங்களை தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு (2025) தொடக்கத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் அதை கண்டுகொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அழைத்து பேசினார்.
இதையடுத்து, அவர்களின் கோரிக்கை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் என அறிவிக்கப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சம்பளம் படித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை அரசு எந்தவொரு பேச்சுவார்த்தைக்கு முன்வராத காரணத்தால், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது.
திமுக அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் அறிவிப்பை ஏற்று புதிய ஒய்வூதியம் திட்டம் அறிவித்துள்ளதுடன், செவிலியர்களின் போராட்டத்தையும் ஏற்று பணி வழங்கப்படும் உறுதி அளித்துள்ள நிலையில், தங்களது கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராடிய ஆசிரியர்களுக்கு ‘சம்பளம் பிடித்தம் கிடையாது’! தேர்தலால் பின்வாங்கியது தமிழக அரசு…
[youtube-feed feed=1]சமவேலைக்கு சம ஊதியம்: 6-வது நாளாக தொடர்கிறது ஆசிரியர்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு…