சென்னை:

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கூறுகையில், ‘‘ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 3 கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது.

தி.மு.க. வழங்குதாக அறிவிக்கப்பட்ட நிதி இன்னும் வந்து சேரவில்லை’’ என்றார்.