சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக தலைமை, தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவினர் பல தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி, தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இந்த அறிக்கையை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்,  டிஆர்.பாலு ஒப்படைத்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு டி.ஆர்.பாலு தலைமை யில் அமைக்கப்பட்டிருந்தது. அவருடன்  சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவினர், வணிகர்கள், விவசாயிகள், நிறுவனங்கள் உள்பட பல தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தது. மேலும்,  சமீபத்தில், திமுக தரப்பில் பொதுமக்களின் கருத்து கேட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதில், உங்கள் புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொள்ள எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு, வரும் 28ந்தேதிக்குள் எங்களுக்கு அனுப்புங்கள் அதற்கான இமெயில் முகவரியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்மூலம் கிடைத்த தகவல்களையும் கருத்தில் கொண்டு  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதால் அதை இறுதி செய்வதற்காக மு.க.ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சமர்ப்பித்துள்ளார். ஸ்டாலின் இதுகுறிது விரைவில் ஆய்வு செய்து இறுதி அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.