நெட்டிசன்:

சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu ) அவர்களின் முகநூல் பதிவு:

இடது சாரி இயக்கத் தோழர்களை தாக்கி பல தி.மு.க. தொண்டர்கள் இணையத்தில் பரப்புரை செய்து வருவதை பார்த்தேன்.

மக்கள் நலக் கூட்டணியை இன்னமும் விடாப்பிடியாக பிடித்து வைத்திருப்பதும், திருமாவளவனை வெளிப்படையாக தி.மு.க. கூட்டணிக்குள் போய்விட அனுமதிக்காமல் தடுப்பதும் இடது சாரி தோழர்கள் என்பதால்தான் தி.மு.க. தொண்டர்களின் இலக்கு இப்போது இடது சாரி இயக்கத்தின் மீது பாய்ந்திருக்கிறது.

“இடது சாரி இயக்கத்தின் பொலிட்பீரோவில் இத்தனை வருடங்களாக ஒரு தலித்கூட இல்லையே?” என்று இப்போது கேள்வியெழுப்பும் உடன்பிறப்புகளே.. இதற்கு முன்பான காலக்கட்டங்களில் இடது சாரி இயக்கத்துடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கும்போது உங்களுடைய கட்சியின் தலைவர்கள், யாரேனும் இந்தக் கேள்வியை எங்கேனும் எழுப்பியிருக்கிறார்களா..? அவர்களுக்குத் தெரியும் இது முட்டாள்தனமான கேள்வியென்று..!

தோழர்களின் இயக்கம் என்பதே சாதி, மதப்பற்றற்ற இயக்கம் என்பதுதான். அவர்கள் எப்படி “இந்தாண்டு இந்த சாதி கோட்டா இத்தனை…” என்று சொல்லி பிரித்து தேர்வு செய்வார்கள். அவர்களது கட்சியின் அடிப்படை கொள்கையையே தகர்த்தெறியும் செயல் அல்லவா அது..?

தி.மு.க.வின் கொள்கைக் குன்றுகளே.. மார்க்சிய இயக்கத்தின் கொள்கைகளைகூட தெரிந்து வைத்திருக்காமல்.. இத்தனை நாட்களாக நீங்கள் அரசியல் செய்வது இனி சமூக வலைத்தளத்திற்கும் அபாயம்தான் போலிருக்கிறது. இப்படியா இருக்கும் உங்களது சொத்தை வாதம்..?!

பதிலுக்கு இடது சாரிகள் தேர்தலுக்கு தேர்தல் தொகுதியில் சாதி பார்த்து, சாதி பார்த்து ஆட்களை நிறுத்தி வைக்கும் உங்களது சாதி வெறி அரசியலை பற்றி பிட்டு பிட்டு வைத்து கேள்வி கேட்டால் உங்களுடைய முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள்..?

இப்போது சாதியை தமிழ்நாட்டில் விடாமல் வளர்த்தெடுப்பது நீங்களும், உங்களது சக எதிரியுமான அதிமுகவும்தானே..?

எந்தத் தொகுதியிலாவது மைனாரிட்டி ஜாதியினரை சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் உங்களுடைய கட்சித் தலைமை நிறுத்தியிருக்கிறதா..? இல்லையே..? சாதி, பணம் இது இரண்டும்தானே உங்களுடைய கட்சியின் நேர்காணலில் கேட்கப்படும் இரண்டே இரண்டு கேள்விகள்..

உங்களுக்கென்ன இடது சாரி தோழர்களை கேள்வி கேட்க உரிமையும், தகுதியும், அருகதையும் இருக்கிறது உளுந்தம் பருப்புக்களே..?!

அப்படியென்ன பிராமணிய எதிர்ப்பு உங்களுக்கு..? ஏன் பிராமணர்களென்றால் உங்களுக்கு ஆகாதா..? அல்லது அவர்கள் மக்கள் விரோதிகள் என்று நினைக்கிறீர்களா..? ஏன் அவர்களில் மக்கள் நலத்தை பேணும் சமூகர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா..?

உங்களுக்கு பிராமணர்கள்தான் பிரச்சினை என்றால் உங்களது தலைவரின் குடும்பத்தில் ஏன் ஒரு பிராமணரின் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டார் என்று அவரை சம்மட்டியால் அடித்துக் கேட்டிருக்க வேண்டியதுதானே..?

உங்களுடைய தலைவரின் மருத்துவர்களும், நெருங்கிய நண்பர்களும் பிராமணர்களாக இருந்தார்களே.. இருக்கிறார்களே.. “அவர்களையெல்லாம் ஏன் கூட்டி வைச்சு கும்மியடிக்கிறாய் தலைவா…?” என்று உங்கள் தலைவரை பார்த்து என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா..?

ஏனப்பா உங்களுக்கு இப்போது இந்த வெட்டி வேலை..? முடிந்தால் ஒரு கொள்கையில் உறுதியாய் இருங்கள். இல்லாவிட்டால் “பிணி தீர்ந்தது.. பகை அகன்றது…” என்று உங்களது தலைவரை போல இலக்கியம் பேசிவிட்டு நழுவிக் கொள்ளுங்களேன்..!

முதலில் நீங்கள் இப்போது எதிர்ப்பது பிராமணர்களையா..? அல்லது இடதுசாரி்களையா என்பதை தெளிவுபடுத்திவி்ட்டு பேசுங்கள்.

அல்லது திருமாவளவனை நேரடியாக தி.மு.க. கூட்டணிக்கு வரும்படியும், பிடித்திருக்கும் அவரது கையை தயவு செய்துவிட்டுவிடும்படியும் இடது சாரிகளுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் வையுங்கள்..!

ஜனநாயகமான கோரிக்கைகளுக்கு தோழர்கள் நிச்சயமாக மனமிரங்குவார்கள். விட்டுக் கொடுப்பார்கள்..!

இது நாள்வரையிலான தமிழக அரசியலில் தி.மு.க.வையும், தி.மு.க.வினரையும் கடுமையாக சாடியதில் இடதுசாரிகளுக்கு நிச்சயமாக கடைசி இடமாகத்தான் இருக்கும்..!

அ்ந்த மரியாதையையாவது காப்பாற்றிக் கொள்ளுங்களேன் உடன்பிறப்புக்களே..!

கம்யூனிஸ்ட் கட்சியும் பிராமணத் தலைமையும்!