எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன…

Must read

 

நெட்டிசன்:

ப்ரல் 12ந்தேதி 7 அன்று நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அவர் இறந்ததும், வழக்கு காரணமாக சசி சிறைக்கு போகும்  முன்பு ஒரே இரவில், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து, அவருக்கு அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கி, கட்சிக்குள் அதிரடியாக நுழைக்கப்பட்டார் டிடிவி தினகரன் என்னும் ‘பெரா’ வழக்கு குற்றவாளி.

தற்போது கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் சசிகலாவின் குடும்பத்தினர். ஏற்கனவே ஜெயலலிதாவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மன்னார்குடி மாபியா கும்பல் தற்போது அதிமுகவை தங்களது வசமாக்கி உள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழக அரசையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு துறை ஐஏஎஸ்-களும் நடராஜனின் ஆணைக்கே தலைவணங்கு கிறார்கள் என்றும் எடப்பாடியை கண்டுகொள்வது இல்லை என்றும் கோட்டை வட்டாரம் கூறுகிறது.

இதற்கு உதாரணமாக, தற்போது, உள் மாவட்டங்களில் தங்களுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை பந்தாடி வரும் நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது. இதை முழுக்க முழுக்க செய்வது சசிகலாவின் கணவர் நடராஜன் என்றும், ‘எடப்பாடி’ வெறும் ‘எடுபிடி’தான் என்றும் கோட்டை வட்டார அதிகாரிகள் மட்டத்தில் இருந்து குமுறல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே, ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, ஆட்சியை கைப்பற்ற சசிகலாவை களமிறக்கி, முதலில் பொதுச்செயலாளர், பின்னர் சட்டமன்ற குழு தலைவர்… அதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி ஓபிஎஸ்-ஐ நச்சரித்தது மன்னார்குடி மாபியா கும்பல், அவர் ஒத்துழைக்காததால்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது ஆதரவு காவலர்கள் மூலம் திட்டமிட்டே கலவரம் உருவாக்கப்பட்டது என்றும், பின்னர் ஓபிஎஸ்-சை மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்ததே.

தற்போது ஓபிஎஸ் மனநிலையில்தான், எடுபிடியாக இருக்கும் எடப்பாடியின் மனநிலையும் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி வெறும் ‘பொம்மை’ முதல்வராக இருந்து வருகிறார் என்றும்… அவரது பேச்சை அமைச்சர்கள் மட்டுமல்ல அவரது கார் டிரைவர்கூட கேட்பதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘சசி அதிமுக’வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டிருப்பது எடப்பாடியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தனக்கும் ஓபிஎஸ்-ன் நிலைதான் ஏற்படும் என தனகுள்ளேயே குமுறிக்கொண்டிருக்கிறாராம்… தனது பதவியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், தனது முதல்வர் பதவி இன்னும் ஒருமாதம்தான் என்றும் தனது ஆதரவாளர்களிடம் புலம்பியதாக கோட்டை வட்டார தகவல்கள் கூறுகின்றன….

நேற்று (15-ந்தேதி) அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்ட நாள் ‘முதல் நாள்’ என்றும்… தேர்தல் முடிவு வெளியாகும் நாளான, ஏப்ரல் 15ந்தேதிதான் எடப்பாடியின் ‘இறுதி நாள்’ என்றும் அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு அச்சாரமாகவே அவரது நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நடைபெற்று வருகிறது. இன்று ஜெயலலிதா சமாதியில் தனந்தனியே சென்று வணங்கியது அவரது ஆதரவு தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாநில முதல்வர்கூட ஒரு அமைச்சரோ, அதிகாரியோகூட செல்லவில்லையே என்று குமுறுகிறார்கள்.

மேலும், ‘சசி அதிமுக’ தொண்டர்களின் தேர்தல் பிரசாரமும் இதையே சுட்டுக்காட்டுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்…

எனவே, தேர்தல் முடிந்த உடனே டிடிவி தினகரன் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் ‘சசிகலா’ செய்த சபதப்படி அவரது குடும்பத்தை சேர்ந்த டிடிவி தினகரன் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் மன்னார்குடி வட்டார தகவல்கள் கூறுகிறது..

எடப்பாடியின்  ஆட்சியின் ஆயுட்காலம் எண்ணப்படுகின்றன…  இன்னும் 30 நாட்கள்தான்….

முகநூல் பதிவு

More articles

Latest article