சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 18ம் தேதி மாவட்டச்செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-12-2021 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில், சென்னை, “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel