சென்னை:
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 17ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 17-2-2020 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும், இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த கூட்டத்தில் கழகத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

.
Patrikai.com official YouTube Channel